Jump to content
Sign in to follow this  
  • entries
    340
  • comments
    0
  • views
    45,630

Photos - Mannargudi Panguni Brahmautsavam Day 11. 17.3.18. Morning Velli pallaku to go to Gopinathan Sannithi from 10 kms away from temple. Night Velli Sesha vahanam from Gopinathan Sannithi.

Sign in to follow this  
A108-AI

119 views

Thanks to Sri Sriram dheekshithar and Sri Mannarkudi Uppili Srinivasan

ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்,இராஜமன்னார்குடி. பங்குனி பெருவிழா (பிரமோற்சவம்) பதினொன்றாம் திருநாள் இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் சேவை

ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்,இராஜமன்னார்குடி. பங்குனி பெருவிழா (பிரமோற்சவம்) பதினொன்றாம் திருநாள் காலை திருவடி திருமஞ்சனம்

என்ன மாயம் செய்து எங்களை மயக்குகிறாய்?

பதினெட்டு நாள் உத்ஸவம் மற்றும் பன்னிரண்டு நாள் விடாயற்றி, ஆகமொத்தம் ஒரு மாத மிகவும் சுறுசுறுப்பான அலுவல்களுக்கு இடையில்…….. இடையனாக உனக்கு நேரம் கிடைத்ததா கோபாலா?

என்னதான் ராஜாவாகவும், வேணுகோபாலனாகவும், வைகுண்டநாதனாகவும் நீ மன்னை வீதிகளில் வலம் வந்தாலும் உன்னுடைய இந்த சேவை மனதை என்னமோ செய்கிறது கோபாலா….எங்களை மிக நெருக்கமாக வைத்துக்கொள்ள நீயாக தேர்ந்தெடுத்த அவதாரம் அல்லவா இந்த கிருஷ்ணாவதாரம்!

“பத்துடை அடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்
மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உறவிடையாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே!!”

என்ற ஸ்ரீ நம்மாழ்வாரின் வார்த்தையை எங்களுக்காக நிரூபித்துக்காட்ட இந்த எளிய வடிவமோ?!

அதெல்லாம் இருக்கட்டும்…அடியோங்களுக்கு நெடு நாட்களாக ஒரு சந்தேகம்…அதை மட்டும் தீர்த்து வைத்துவிடு கோபாலா…

மாடு கன்றுகளுடன் இருக்கும்போது அப்படியே இடையனாகி விடுகிறாய்….

சிங்கம், இருதலை பக்ஷி, புஷ்ப பல்லக்கு ஏறி விட்டால் திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேன் என்னும் படியாக மன்னனாகவே மாறி விடுகிறாய்!

ரிஷியமுக பர்வதம் மற்றும் அனுமந்த வாகனம் என்றால் கற்பார் இராமபிரானைஅல்லால் மற்றும் கற்பரோ என்னும்படியாக ராமனாகவே மாறி விடுகிறாய்!

சேஷ வாகனம் ஏறினால் அப்படியே பரமபதனாகிவிடுகிறாய்!

கருட சேவையில் வைகுண்டநாதன் மன்னை வந்துவிட்டானோ என்று வியக்க வைக்கிறாய்!

வெண்ணெய்த்தாழி அன்றோ வெண்ணெய் குடத்தோடு தவழ்ந்து வந்து மனதை களவு செய்கிறாய்!….

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் திருக்கோலத்தில் கோதை நாச்சியாராக நீ சேவை சாதிப்பது!!!…

எங்கள் கண்களை எங்களாலேயே நம்பமுடியவில்லை…. என்ன மாயம் செய்து எங்களை மயக்குகிறாய்?….

அதை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டுமாவது சொல்லிவிடேன்?!!! உலகமுண்ட பெருவாயா… எதோ என்னால் முடிந்த வெண்ணையும் அப்பமும் தருகிறேன் …..
தயவு செய்து மறைக்காமல் கூறிவிடு..

img-20180317-wa0280142548806147577521.jpg

img-20180317-wa02784594804287018721785.jpg

img-20180317-wa02778129231836561781759.jpg

img-20180317-wa02764701181276556153153.jpg

img-20180317-wa02768070338555408332956.jpg

img-20180317-wa02751193849844749617332.jpg

img-20180317-wa02745051140994533844793.jpg

img-20180317-wa027321721685428523269.jpg

img-20180317-wa02746582491443331826975.jpg

img-20180317-wa02712033006737751790873.jpg

img-20180317-wa02701906473951101409807.jpg

img-20180317-wa0269646050942326014061.jpg

img-20180317-wa02688718595435405479177.jpg

img-20180317-wa02798493483345814390714.jpg

 

View the full article

 

Sign in to follow this  


ABOUT US

Shri KrishnaInternational Vaishnavas Portal: download Vaishnava scriptures for free, Vaishnava news, blogs, gallery, videos, bhajans, lectures, practice, instructions, holy places map, Krishna stories. Non-religious platform for glorifying the ideals of Krishna-bhakti (love to Krishna).

Chant daily with love to Shri Krishna:
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare!

OUR PAGES

×